Close Menu
    What's Hot

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»‘பாவங்களின் தீவு’ எனப்படும் எப்ஸ்டீன் தீவு! எங்குள்ளது இந்த மர்மத்தீவு?
    உலகம்

    ‘பாவங்களின் தீவு’ எனப்படும் எப்ஸ்டீன் தீவு! எங்குள்ளது இந்த மர்மத்தீவு?

    Editor web3By Editor web3February 8, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Epstein Island
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று உலகையே உலுக்கி வரும் எப்ஸ்ட்டீன் ஃபைல்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த குற்ற சம்பவங்கள் அரங்கேறிய அந்த ஒற்றைத்தீவு பற்றி தெரியுமா? பாவத்தீவு என அழைக்கப்படும் அந்த தீவு பற்றிய பல திடுக்கிட்டு தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    முதலில் இந்த ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கெல்லாம் மையப்புள்ளியான ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் என்பவர் யாரென்று பார்த்தால் தான் தீவை பற்றி பார்ப்பதற்கான காரணம் புரியும். அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன், நியூயார்க் நகரில் உள்ள உலக நிதி சந்தையான வால்ஸ்ட்ரிட்டில் பணியாற்றியவர். தனது தொழில் மற்றும் நிதி திறமையால் நாட்டின் பெரிய நிறுவனங்களின் தலைவர்களை தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் அவரது வருமானம் உச்சத்திற்கு எகிற, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு நிதி உதவிகளை வழங்கி கவனம் ஈர்த்தார்.

    இவையெல்லாம் ஜெஃப்ரி எப்ஸ்ட்டீனின் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கொடூரமானது. இவரது வணிக ஒப்பந்தங்கள், சக்தி வாய்ந்த நபர்களின் நட்புகள் ஆகியவற்றின் ஒரு முக்கிய பகுதியாக பாலியல் தொழில் இருந்துள்ளது. அதுவும் சிறுமிகளை வைத்து மேற்கொண்ட பாலியல் தொழில். இது தொடர்பான ஆவணங்களும், இ-மெயில் உரையாடல்களும், வீடியோக்களும், “பெரு பணம் படைத்த முதலைகளின் காம இச்சைகள் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு சிறுமிகள் இரையாக்கப்பட்டுள்ளனர்” என்ற விடயத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றச்சாட்டின் பேரில் கைதாகி சிறையில் இருந்த இந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் 2019 ஆம் ஆண்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அது தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும் சிறையில் கண்காணிப்பு கேமரா இல்லாமல் போனது, அவரது உடலில் இருந்த மர்ம காயங்கள், பணியில் இருந்த போலீசார் தூங்கியதாக சொல்லப்பட்டது எல்லாம் சந்தேகங்களை ஏற்படுத்தியது. தற்போது வரை அந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை.

    Epstein Island 1

    இத்தகைய சூழலில் அவர் இறந்து 6 ஆண்டுகள் கழித்து, அவரது தோழியான கிஸ்லென் மேக்ஸ்வெல் என்பவரது வழக்கின் ஒரு பகுதியாக 900-க்கும் மேலான ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களே இன்று உலகையே திக்குமுக்காட வைத்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்ட்டீனுடன் நட்புறவில் இருந்த அரசியல் தலைவர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், விஞ்ஞானிகள் என ஏராளமான பெரும்புள்ளிகளின் நற்பெயர் மற்றும் நம்பகத்தன்மை இதன்மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், ஆவணங்களில் இடம்பெற்றிருப்பதாலேயே அவர்களை குற்றவாளிகளாக கருதவும் முடியாது.

    சரி இப்போது அந்த தீவை பற்றி பார்க்கலாம். இந்த ஜெஃப்ரி எப்ஸ்ட்டீன் அமெரிக்க கரீபியன் கடல் பகுதியில் யு.எஸ்.விர்ஜீன் தீவுகளில் ஒன்றான லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவை (72 ஏக்கர்) 1998 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். அங்கு தன்னுடைய தனி விமானம் மூலம், பல்வேறு முக்கியப்புள்ளிகளை அங்கு அழைத்து வந்துள்ளார். உள்ளூர் மக்களால் “பாவங்களின் தீவு” மற்றும் “குழந்தை பாலியல் தீவு” என அழைக்கப்படும் அந்த மர்மத்தீவு வெளியுலக தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. யாரும் உள்ளே செல்ல முடியாத அந்தத்தீவில் விசித்திரமான கட்டுமானங்கள், நீலநிற கோடுகளுடன் கூடிய பூட்டப்பட்ட கட்டிடம், அதிநவீன ஹெலிபேட், நூலகம், சொகுசு விடுதிகள், பாதாள சுரங்க அறைகள் போன்றவை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீவுக்கு வந்து சென்ற உலக நாடுகளின் தலைவர்கள், பணக்காரர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களின் விவரங்கள் விமான போக்குவரத்து பதிவுகளாக உள்ளன. இந்த மர்மத்தீவு தான் எப்ஸ்ட்டீனின் பாலியல் கடத்தல் அமைப்பின் தலைமையகமாக செயல்பட்டுள்ளது.

    தீவின் ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அங்கு வந்த பெரும்புள்ளிகளின் செயல்பாடுகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அப்பெரும்புள்ளிகள் மிரட்டப்பட்டிருக்கலாம், தற்போதும் உலக வல்லாதிக்கத்தால் மிரட்டப்பட்டு வரலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரதமர் மோடியின் பெயரும் அந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, தற்போது இந்திய – அமெரிக்க ஒப்பந்தங்களுக்கு இந்தியா உடன்பட்டிருப்பதன் பின்னணியிலும் இவ்விவகாரம் இருக்குமோ? என சந்தேகிக்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ். எப்ஸ்டீன் மறைவுக்கு பிறகு, 2023-ல் ஸ்டீபன் டெக்காப் என்ற முதலீட்டாளர், அந்த தீவையும் அதன் அருகில் இருக்கும் கிரேட் புனித ஜேம்ஸ் தீவையும் சுமார் 60 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.560 கோடிக்கு) வாங்கியுள்ளார்.

    மொத்தத்தில் உலகையே உலுக்கியிருக்கும் சிறுமிகளின் பாலியல் கொடூர சம்பவங்கள் நடந்துள்ள, ‘பாவங்களின் தீவு’ எனப்படும் ‘லிட்டில் செயின்ட் ஜேம்ஸ் தீவை’ உலக மக்கள் பலரும் கூகுள் மேப்பில் தேடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅப்படி போடு!. சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!. நிபந்தனைகள் என்ன?
    Next Article ‘உனக்கு பைத்தியமா’?. சூர்யகுமார் யாதவை திட்டிய ரோஹித் சர்மா!. ஏன் தெரியுமா?.
    Editor web3
    • Website

    Related Posts

    உலகிலேயே மிகக் குட்டையான மக்கள் வாழும் நாடு இதுதான்!. இவர்களின் உயரம் எவ்வளவு தெரியுமா?

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    பிரதமராக பதவியேற்கும் தாரிக்!. வங்கதேசம் செல்லும் பிரதமர் மோடி!.

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026

    அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.