கனடாவில் ஏப்ரல் 30 வரை விஜய்யின் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை என்று படத்தை வெளியிடும் York Cinemas நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜன நாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.
தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கை வாபஸ் பெற்ற பட தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளது.
https://x.com/Chrissuccess/status/2022737262157664657?
இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு York Cinemas தெரிவித்துள்ளது.
