Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா?.
    தமிழ்நாடு

    ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா?.

    Editor web3By Editor web3February 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sasikala new party
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபை தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தரப்பு ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன.

    இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். வருகிற சட்டசபை தேர்தலில் எனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்’ என்று கூறினார்.

    அதன் தொடர்ச்சியாக கடந்த 6-ந்தேதி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  இதையடுத்தே அவர் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சசிகலா உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் உசிலம்பட்டி பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா புதிய கட்சி தொடங்குகிறார். அந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரையும் சசிகலா அறிவிக்கவுள்ளதாகவும்  கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!
    Next Article “AI குறித்து உலகளாவிய விவாதம் நடத்த இந்தியா சரியான நாடு”!. ஐ.நா.பாராட்டு!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.