Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»“AI குறித்து உலகளாவிய விவாதம் நடத்த இந்தியா சரியான நாடு”!. ஐ.நா.பாராட்டு!
    இந்தியா

    “AI குறித்து உலகளாவிய விவாதம் நடத்த இந்தியா சரியான நாடு”!. ஐ.நா.பாராட்டு!

    Editor web3By Editor web3February 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    UN Chief Antonio Guterres
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவை “மிகவும் வெற்றிகரமான” வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றும், உலக விவகாரங்களில் அதன் செல்வாக்கு விரிவடைந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடைபெற உள்ள India–AI Impact மாநாடு குறித்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த முக்கியமான உலகளாவிய விவாதத்தை நடத்த இந்தியா சரியான நாடாகும் என்று குறிப்பிட்டார்.

    ஐ.நா. தலைமையகத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துடனான ஒரு உரையாடலில், இந்த மாநாடு நடத்த ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலம் முழுவதற்கும் பயன்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

    AI, வல்லரசு நாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படக் கூடாது: செயற்கை நுண்ணறிவு (AI) மிக முன்னேறிய நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும் கருவியாக மாறக் கூடாது என்பதாகும். உலகின் இரண்டு பெரிய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் உருவாகக் கூடாது என்று அவர் எச்சரித்தார். நேரடியாக பெயர்களை குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை நோக்கி இருந்ததாக பார்க்கப்படுகிறது.

    செயற்கை நுண்ணறிவு (AI) வழங்கும் நன்மைகள் சில நாடுகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய அவர், அதற்கு பதிலாக, தெற்கில் உள்ள வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளும் இந்த சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தின் பலன்களை சமமாகப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    AI உலகளாவிய வளர்ச்சி, புதுமை மற்றும் முன்னேற்றத்தை ஆதரிக்கும் பொதுவான கருவியாக மாற வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் சமத்துவமான முன்னேற்றத்தை உருவாக்க AI உதவக்கூடும் என்றும், அதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற உள்ள இந்த உயர்மட்ட உச்சி மாநாடு, தெற்கு பகுதியில் நடத்தப்படும் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடாகும். இந்த மாநாடு “People, Planet, Progress” என்ற மூன்று முக்கிய கருப்பொருட்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. மனித நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த முன்னேற்றம் ஆகிய துறைகளில் AI எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற உள்ளன.

    இந்த நிகழ்வில் பல உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அதில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, கூகிள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த உயர்மட்ட AI உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அன்டோனியோ குட்டெரெஸும் இந்தியா வரவுள்ளார்.

    “உண்மையான பன்முக உலகம்” (true multipolar world) உருவாக இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார். உலக அமைப்பு ஒரே ஒரு ஆதிக்க சக்தியின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்றும், இரண்டு வல்லரசுகளுக்கிடையே பிரிந்த அமைப்பாகவும் மாறக் கூடாது என்றும் அவர் கூறினார்.

    இந்தியா போன்ற எழுச்சி பெறும் பொருளாதார நாடுகள், உலக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் அதிக சக்திவாய்ந்த பங்கை வகிக்க வேண்டும். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் வளர்ந்து வரும் கூட்டுறவுகள், குறிப்பாக சமீபத்திய ஐரோப்பிய யூனியன் உடன் வர்த்தக முன்னேற்றங்கள், இதற்கான நல்ல உதாரணங்களாகும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா?.
    Next Article 30% சீட்டு; ஆட்சியில் பங்கு கட்டாயம்!. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மாணிக்கம் தாகூர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.