Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!
    தமிழ்நாடு

    ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு?. இபிஎஸ் திட்டம்!

    Editor web3By Editor web3February 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jayalalith bday eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. அதன் ஒருபகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளனர். ஆளும் திமுகவின் பிரச்சாரப் பயணம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது தேர்தல் தயாரிப்புகளைப் படிப்படியாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

    அந்தவகையில் முதல் ஆளாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாளையொட்டி, தேர்தல் வாக்குறுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதுவரை 2 கட்டங்களாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த நகர்வுகளில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். அதாவது, வழக்கமாக அரசியல் கட்சிகள் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று தேர்தல் அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடுவர். ஆனால் தற்போது பல்வேறு கட்டங்களாக வெளியிடுவது புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுகவெளியிடப் போகும் தேர்தல் அறிக்கைக்கு நெருக்கடியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அடுத்த அதிரடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் பட்டியலை வைத்து தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி, அதிமுக கட்டாயம் போட்டியிடும் என்று கூறப்படும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் நீங்கலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு விவரத்தையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதி பாணியில் திமுகவிற்கு முன்னதாக வேட்பாளர்களையும் அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.
    Next Article அதிர்ச்சியில் அதிமுக!. விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ மனோகர்!
    Editor web3
    • Website

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.