Close Menu
    What's Hot

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கு!. ராமதாஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கு!. ராமதாஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3February 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ramadoss high court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கூறி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்று ராமதாஸ் தரப்புக்கு எச்சரிக்கை நீதிபதிகள் எச்சரிக்க விடுத்துள்ளனர்.

    பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நிறுவனர் ராமதாசை தலைவராகவும், அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும்,
    அதுவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, பா.ம.க. சார்பில் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, உள்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, பா.ம.க. சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 2025 ம் ஆண்டு மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து, 2026ம் ஆண்டு வரை பதவிக்காலம் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

    மேலும் ராமதாசை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கட்சியை அன்புமணி அபகரித்துக் கொண்டார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ் தான் என தெரிவித்தார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பா.ம.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என விளக்கமளிக்கப்பட்டது.

    விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை என்று பதிலளித்தார்.

    உடனே அன்புமணி தரப்பில் யாராவது ஆஜராகி இருக்கிறார்களா என்று தலைமை நீதிபதி கேட்டார். அப்போது அன்புமணி தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர், ஏற்கனவே ஒரு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சமரசம் செய்து வைக்க முயற்சித்தார் ஆனால் நடைபெறவில்லை. இந்த வழக்கு மனுவில் ராமதாஸ் போட்டுள்ள கையெழுத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

    இதை மறுத்த ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், ராமதாஸ் நடை பயிற்சி மேற்கொள்கிறார். நீச்சல் பயிற்சி மேற்கொள்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர்கள் தரப்பில் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படுகின்றன எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா? எனக் கூறி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உன் கட்சி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது என்பதால், உரிமைகள் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என கூறி, இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?
    Next Article 14,000 ஆண்டு கால வரலாறு!. இந்தியாவில் பிரபலமான ரொட்டி!. முதலில் எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    June 21, 2026

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    June 21, 2026

    பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!

    11 பந்துகளில் அரைசதம்.. 29 பந்துகளில் 94 ரன்கள்!. இலங்கை பவுலர்களை திணறடித்த சூர்யவன்ஷி!

    சிம்லாவில்  சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.