Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.
    தமிழ்நாடு

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    Editor web3By Editor web3February 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MDMK DMK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, இந்த முறை தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளைக் கோரியுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் 12 விருப்பத் தொகுதிகளின் பட்டியல் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது.

    கடையநல்லூர், சங்கரன்கோவில், சாத்தூர், அரியலூர், சீர்காழி, திருச்சி கிழக்கு (அல்லது) மணப்பாறை, புவனகிரி, கடலூர், நெய்வேலி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, கோவை வடக்கு ஆகிய 12 தொகுதிகளில், தங்களுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதும் 8 தொகுதிகளைக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

    மேலும்,இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் மதிமுக இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த காலங்களைப் போல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், இந்த முறை தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். 

    அதாவது,  கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது கட்சியின் தனித்துவத்தைப் பாதிப்பதாக நிர்வாகிகள் கருதுவதால், கட்சியின் அடையாளத்தைத் தக்கவைக்க இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திமுகவினரிடம் மதிமுகவினர் கூறியுள்ளனர். துரை வைகோ அவர்கள் மக்களவைத் தேர்தலில் தீப்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலிலும் அதே போன்ற ஒரு தனிச் சின்னத்தைப் பயன்படுத்தி தங்களின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த அக்கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.

    இதேபோல், சட்டமன்ற இடங்களுடன் கூடுதலாக, ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஒரு பிரதான கோரிக்கையாக வைத்துள்ளனர்.

    ஏற்கனவே மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பதவிக்காலம் மற்றும் கட்சியின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மேலவையில் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒருவேளை சமரசம் ஏற்பட்டால் கூட, ராஜ்யசபா சீட் விவகாரத்தில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

    200 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற முனைப்பில் திமுக நிர்வாகிகள் உள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்த இழுபறி நீடிக்கிறது. எனினும், மதிமுகவின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு விரைவில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!
    Next Article டி20 உலகக்கோப்பை!. மோசமான சாதனையில் இந்தியா முதலிடம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    April 21, 2026

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.