தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர், வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை. ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது வரலாற்றில் பதிவானது. தி.மு.க.வில் இணைந்த பின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடிய பண்பு அதிமுகவில் இல்லை என்ற அவர், தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளேன் என்றார். வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். திமுகவை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும். அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளேன் என்றார்.
