Close Menu
    What's Hot

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு!. கதறி அழுத கெஜ்ரிவால்!.
    இந்தியா

    ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு!. கதறி அழுத கெஜ்ரிவால்!.

    Editor web3By Editor web3February 27, 2026Updated:February 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    arvind kejriwal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று  விடுவித்துள்ளது. . சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

    நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    “நான் ஊழல்வாதி அல்ல. கெஜ்ரிவாலும், மணீஷ் சிசோடியாவும் உண்மையான நேர்மையாளர்கள் என்பதை இன்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் சம்பாதித்தது நேர்மை மட்டுமே. அந்த நேர்மையைச் சிதைக்க மிகப்பெரிய சதி நடந்தது. இறுதியில் உண்மை வென்றுள்ளது,” என்று அவர் கூறினார். அப்போது அருகிலிருந்த மணீஷ் சிசோடியா அவரைத் தேற்றினார்.

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஆம் ஆத்மி கட்சியை நசுக்குவதற்காகத் தீட்டப்பட்ட மிகப்பெரிய அரசியல் சதி இது என கெஜ்ரிவால் விமர்சித்தார். “பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இணைந்து எங்களைச் சிறையில் தள்ளினர். ஒரு முதலமைச்சரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தது முன்னெப்போதும் நடக்காத ஒன்று,” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

    நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் சமூக வலைதளத்தில், “இந்த உலகில் எவ்வளவு சக்தி படைத்தவராக இருந்தாலும் சிவ சக்திக்கு மேலானவர் அல்ல. இறுதியில் உண்மை எப்போதும் வெல்லும்,” எனத் தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

    வழக்கு பின்னணி: டெல்லி அரசு தனது வருவாயை அதிகரிக்கவும், மதுபான விற்பனையில் இருந்த அரசு ஏகபோகத்தை ஒழித்து தனியாருக்கு வாய்ப்பளிக்கவும் ‘மதுபானக் கொள்கை 2021-22’-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 கடைகளுக்குத் தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது.

    இந்தப் புதிய கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக விதிகள் மாற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. அதாவது, மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது. டெல்லி தலைமைச் செயலாளர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தார்.

    இதை தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை அனுப்பிய 9 சம்மன்களைத் தவிர்த்த நிலையில்,  கடந்த 2024 மார்ச் 21 அன்று டெல்லி முதலமைச்சராக இருந்தபோதே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே பதவியில் இருந்தபோது கைது செய்யப்பட்ட முதல் முதல்வர் இவராவார். தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் பி.ஆர்.எஸ் தலைவருமான கே.கவிதாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    மதுபான உரிமம் பெற ‘சவுத் குரூப்’ என்ற அமைப்பிடமிருந்து 100 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டு, அந்தப் பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வாதிட்டன. நீண்ட விசாரணைக்குப் பிறகு, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக எந்த ஒரு திட்டவட்டமான ஆதாரமும் இல்லை என நீதிபதி ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார். “இந்த வழக்கு முழுவதும் வெறும் ஊகங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று கூறி 23 பேரையும் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Acquittal Arvind Kejriwal Corruption case Court verdict Delhi Politics Legal relief அரவிந்த் கெஜ்ரிவால் கெஜ்ரிவால்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்!
    Next Article உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்!. தேர்தல் ஆணையர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    July 26, 2026

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    July 26, 2026

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த்: இந்தியாவுக்கு முதல் தங்கம்! பளுதூக்குதலில் மீராபாய் புதிய சாதனை!

    ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: மாணிக்கம் தாகூர் தகவல்!

    சென்னையில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி!: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

    டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தித் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.