Close Menu
    What's Hot

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்!
    தமிழ்நாடு

    மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்!

    Editor web3By Editor web3February 27, 2026Updated:February 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pmk mango
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றார்.
    கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம், பா.ம.க-வுக்கு மாம்பழச் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதம் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் முகவரிக்கு அனுப்பப்படாமல், அன்புமணியின் முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்தும், அந்தக் கடிதத்தை ரத்து செய்யக் கோரியும் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ராமதாஸ் தரப்பில் “கட்சியின் உறுப்பினராகவே இல்லாத முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸின் முகவரிக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது சட்டப்படி தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    இதேபோல், அன்புமணி தரப்பில், கட்சி எனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்திருந்தனர்.

    இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாகத் ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

    ராமதாஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து, மனுவைத் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

    Case withdrawn Election symbol dispute Mango symbol case PMK Ramadoss ramadoss
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூச்சமே இல்லையா ஓபிஎஸ்?. தயவு செய்து “அம்மா” புகைப்படத்தை துறந்து விடுங்கள்!. அதிமுக ஆவேசம்!
    Next Article ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு!. கதறி அழுத கெஜ்ரிவால்!.
    Editor web3
    • Website

    Related Posts

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.