Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சவாலான தொகுதிகளை நானே எதிர்கொள்கிறேன் என்றார் முதல்வர்!. செல்வப்பெருந்தகை புகழாரம்!
    தமிழ்நாடு

    சவாலான தொகுதிகளை நானே எதிர்கொள்கிறேன் என்றார் முதல்வர்!. செல்வப்பெருந்தகை புகழாரம்!

    Editor web3By Editor web3March 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று (மார்ச் 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  ஒவ்வொரு கட்சியாக அழைத்து முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீடு பேச்சு வார்தை குழுவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    பின்னர் எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் அவர்களிடம் பேசுவோம். குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் எங்கெல்லாம் கடுமையான போட்டி இருக்குமோ அதையெல்லாம் திமுக எடுத்து எதிரணியில் உள்ளவர்களைத் தோல்வியடையச் செய்து வெற்றி கண்டிருக்கிறார்.

    இது என் அரசியல் களத்தில் முதல் அனுபவம்.முன்பெல்லாம் எங்கு பிரச்சினை இருக்கிறதோ அதை வந்து கூட்டணி கட்சிக்குக் கொடுப்பார்கள். ஆனால் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பொது வாழ்க்கையில் இருக்கிறேன். தமிழ்நாட்டு அரசியலில் நான் பார்த்ததில் முதல் முறையாக நான் கண்டது – நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிந்தவுடன் அவரே அழைத்து, ‘இந்த இடத்தில் உங்களால் வெற்றி காண முடியாது, அதை நான் எதிர்கொள்கிறேன்’ என்றார். என்னால் தொகுதியைக் கூடச் சொல்ல முடியும்.ஆகவே சுமுகமாக எல்லாம் நல்ல முறையில் முடியும்.

    முன்னாள் முதலமைச்சர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி வரிசையில் அமர இனி மேல் வாய்ப்பில்லை.” என்று தெரிவித்தார்.

    ”காங்கிரஸ் சார்பில் 5,000-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “இப்போது சிங் டியோ தலைமையில் ஒரு ஸ்க்ரீனிங் கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தமிழகம் வந்து ஆய்வு செய்வார்கள்” என்றார்.

    ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வருவது குறித்த கேள்விக்கு, “அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கிறார். ஐந்து மாநிலத் தேர்தல்கள் – அசாம், மேற்கு வங்கம், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கேரளா எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு கண்டிப்பாக உறுதியாக வருவார்” என்றார்.

    தவெக தலைவர் விஜய்நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்த கேள்விக்கு, “அது ஒரு தனிப்பட்ட விஷயம். அதை நாம் பேசினால் நாகரிகமாக இருக்குமா? அதைப் பேசுவது நாகரிகமாக இருக்காது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதந்தைக்கு போடி.. மகனுக்கு கம்பமா?. தேனியில் ஓபிஎஸ் குடும்பத்தின் தேர்தல் வியூகம்!
    Next Article ராஜ்யசபா தேர்தல்!. 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு! போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.