Close Menu
    What's Hot

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!
    Featured

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    Editor web3By Editor web3August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mla markandeyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து தான் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார்.

    பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் அவையில் பேசுகையில், முதலமைச்சரை விமர்சிக்கும் போது இவ்வளவு கடுமையான சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தம்மை கடிந்து கொண்டதாகக் குறிப்பிட்டார். மேலும், சிறையில் தன்னைச் சந்திக்க வந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரும், “விமர்சனங்கள் அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டுமே தவிர, வன்மமான வார்த்தைகளால் அல்ல” என அறிவுரை வழங்கியதாகக் கூறினார். எனவே, உணர்ச்சிவசப்பட்டு தான் கூறிய அந்த வார்த்தைகளை அனைவரும் பெருந்தன்மையோடு மறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் “கொலை வாளினை எடடா” என்ற வரியை மேற்கோள் காட்டிவிட்டு, “இந்த வரியைச் சொன்னதற்காகத் தயவுசெய்து என்னை மறுபடியும் கைது செய்து சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்” என்று கலகலப்பாகக் குறிப்பிட்டார்.

    பின்னர், தற்போதைய த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாக விமர்சித்த மார்க்கண்டேயன், இது எந்தப் புதிய திட்டங்களும் இல்லாத வெறும் ‘கானல் நீர் பட்ஜெட்’ எனச் சாடினார்.

    முந்தைய திமுக ஆட்சியின் முன்னோடி திட்டங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, பெயர்களை மட்டுமே தற்போதைய அரசு மாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். ‘மாடித்தோட்டம்’ என்பதை ‘பூந்தோட்டம்’ என்றும், ‘அவகாடோவை’ ‘பட்டர் ஃப்ரூட்’ என்றும் பெயர் மாற்றுவது மட்டுமே இந்த ஆட்சியின் புதிய மாற்றம் என அவர் விமர்சித்தார்.

    assembly cm vijay dmk mla markandeyan mla markandeyan Stalin condemned
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?
    Editor web3
    • Website

    Related Posts

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    August 7, 2026

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    August 7, 2026

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஸ்டாலின் கண்டித்தார்; மீண்டும் கைது செய்துவிடாதீர்கள்!. அவையில் மார்க்கண்டேயன் கலகலப்பு!

    மெஸ்ஸி சர்ச்சை!. பிரேசில் கால்பந்து அணியை வரவேற்க தயாராகும் கொல்கத்தா?

    ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்புக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!. ரந்தீர் ஜெய்ஸ்வால் திட்டவட்டம்!

    நாய்களை ஃபீல்டர்களாக மாற்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்!. நெகிழ்ச்சி வீடியோ!

    மெட்டாவுக்கு பேரிடி!. ரூ.4,800 கோடி அபராதம்; சிறுவர் மனநல வழக்கில் அதிரடி!. இந்தியாவில் தொடரும் விசாரணை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.