Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ராஜ்யசபா தேர்தல்!. 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு! போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி!
    இந்தியா

    ராஜ்யசபா தேர்தல்!. 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு! போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி!

    Editor web3By Editor web3March 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

    தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பலத்தின் அடிப்படையில், ஆளும் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    திமுக தரப்பில் மூத்த தலைவர் திருச்சி சிவா மற்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பு அணிச் செயலாளர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸிற்கு ஒரு இடமும், தேமுதிகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காங்கிரஸ் சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    எதிர்க்கட்சி வரிசையில், அதிமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. தம்பிதுரை மீண்டும் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதன் அடிப்படையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். மார்ச் 5-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாக இருந்த நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தங்களின் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். போட்டியின்றி இவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருச்சி சிவா, ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக்,   L. K. சுதீஷ்,   M.தம்பிதுரை மற்றும் அன்புமணி ராமதாஸ்  ஆகியோரின் வேட்புமனுக்கள் செல்லுபடியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதரவு இல்லாத காரணத்தால் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.

    வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 09- ஆம் தேதி கடைசி நாளாகும். ஒவ்வொரு வேட்பாளரும் 10 சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழி இல்லாதபட்சத்தில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்பதால் திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகின்றனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசவாலான தொகுதிகளை நானே எதிர்கொள்கிறேன் என்றார் முதல்வர்!. செல்வப்பெருந்தகை புகழாரம்!
    Next Article பச்சைக்கொடி காட்டிய டிரம்ப்!. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு அனுமதி!.
    Editor web3
    • Website

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.