Close Menu
    What's Hot

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»உலகக் கோப்பைக்கே சவால் விடும் த்ரிஷா ஹேஷ்டேக்!. ட்ரெண்டிங்கில் முதலிடம்!
    சினிமா

    உலகக் கோப்பைக்கே சவால் விடும் த்ரிஷா ஹேஷ்டேக்!. ட்ரெண்டிங்கில் முதலிடம்!

    Editor web3By Editor web3March 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trending trisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டது, சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழலில், த்ரிஷாவுடன் அவர் பொதுவெளியில் தோன்றியது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து மேடையேறிய வீடியோக்கள் வைரலான நிலையில், இந்தப் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளானது.

    இதற்கிடையே,, விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரமான ‘குந்தவை’யைக் குறிப்பிட்டுப் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்தது. “குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் (உட்கார வைத்தால்) நல்லது; அவர் வெளியே வராமல் இருப்பதே பல சிக்கல்களைத் தவிர்க்கும்” என அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக த்ரிஷா, “மைக் இருப்பதாலேயே ஒருவரது பேச்சு அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது; அது ஒருவரின் முட்டாள்தனத்தை உரக்கச் சொல்லும்” எனச் சாடியிருந்தார். த்ரிஷாவின் இந்தக் காட்டமான பதிலைத் தொடர்ந்து, பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் ஒருபுறம் 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்த ஹேஷ்டேக்குகள் (#T20WorldCup2026final) தெறிக்கவிட்டாலும், அதற்கு இணையான வேகத்தில் #Trisha என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. த்ரிஷாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து மற்றொரு தரப்பினரும் என இணையம் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் விஜய்யின் ஒவ்வொரு அசைவும் உற்றுநோக்கப்படுவதால், இந்தத் திருமண நிகழ்வு விவகாரம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேரடி களத்தில் விஜய்!. மார்ச் 10 முதல் தவெக வேட்பாளர் நேர்காணல்!. அதிரடி திட்டங்கள் தயார்!
    Next Article இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!. ஓம் பிர்லாவுக்கு எதிராக ‘பதவி நீக்க’ தீர்மானம்!. பதவி தப்புமா?
    Editor web3
    • Website

    Related Posts

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    March 12, 2026

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    March 12, 2026

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    March 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால்…. ஈரான் போட்ட 3 கண்டிஷன்!. 

    பாஜக ஆட்சியில் ரூ.1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை; மோடி கபட நாடகம் போடுகிறார்!. அமைச்சர் ரகுபதி!

    தலைமை தேர்தல் ஆணையரை நீக்குக!. எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!. 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து!.

    ஈரானுடன் ஜெய்சங்கர் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்!. கூடுதல் விவரங்களை கூற முடியாது!. வெளியுறவு அமைச்சகம்!

    Trending Posts

    அச்சப்படாதீர்கள்!. போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது!. மு.க.ஸ்டாலின் உறுதி!. 

    March 12, 2026

    பச்சைக்கொடி காட்டிய ஈரான்!. ஹார்மூஸ் வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி!. ஜெய்சங்கர் தகவல்!

    March 12, 2026

    கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு டும் டும்!. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைபிடித்தார்!.

    March 12, 2026

    பெரும் நிம்மதி!. இந்தியா வந்தடைந்தது கச்சா எண்ணெய் கப்பல்!. ஹார்முஸ் நீரிணை வழியாக வந்த முதல் கப்பல்!

    March 12, 2026

    சிலிண்டரையும் காணோம், பிரதமரையும் காணோம்!. எதிர்க்கட்சியினர் போராட்டம்!

    March 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.