Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள்!. உத்தேசப் பட்டியல் தயார்!.
    தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 இடங்கள்!. உத்தேசப் பட்டியல் தயார்!.

    Editor web3By Editor web3March 20, 2026Updated:March 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk congress 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டாளியான காங்கிரஸ் இடையே சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடந்த 2021 தேர்தலை விட கூடுதலாக 3 இடங்கள் பெற்று, மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. அத்துடன் ஒரு ராஜ்யசபா இடமும் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த 28 தொகுதிகளை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சி தங்களின் விருப்பமான மற்றும் வெற்றி வாய்ப்புள்ள 39 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுகவிடம் வழங்கத் தயாராக உள்ளது. அந்தவகையில், தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுடன், சென்னை மற்றும் வட மாவட்டங்களில் வேளச்சேரி, அம்பத்தூர், சோளிங்கர் போன்ற முக்கிய இடங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதோடு, நகர்ப்புறங்களில் கூடுதல் இடங்களைப் பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

    காங்கிரஸ் சட்டமன்ற தொகுதிகள் உத்தேசபட்டியல்:

    கிள்ளியூர்
    குளச்சல்
    விளவங்கோடு
    பத்மனாபபுரம்
    ஸ்ரீவைகுண்டம்
    விருதுநகர்
    ஆலங்குளம்
    தென்காசி
    காரைக்குடி
    திருவாடனை
    இராமனாதபுரம்,

    முதுகுளத்தூர்
    நாங்குநேரி
    திருநெல்வேலி
    ஊத்தங்கரை
    மணப்பாறை
    முசிறி
    சோளிங்கர்
    அம்பத்தூர்
    ஸ்ரீபெரும்புதூர்
    பொன்னேரி
    மயிலாடுதுறை
    கூடலூர்
    கும்பகோணம்
    சிதம்பரம்
    வேடசந்தூர்
    மொடக்குறிச்சி
    மதுரை மத்தியம்
    திருப்பூர் தெற்கு
    கோவை தெற்கு
    மதுராந்தகம்
    கலசப்பாக்கம்
    அறந்தாங்கி
    பட்டுக்கோட்டை
    மேட்டூர்
    வேளச்சேரி
    ஊட்டி
    சிவகாசி
    விருத்தாச்சலம்…

    தற்போது திமுக தரப்பில் மற்ற கூட்டணிக் கட்சிகளான சிபிஎம் மற்றும் விசிக ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் 15-ம் தேதி, தமிழகத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், இன்னும் சில தினங்களில் காங்கிரஸ் போட்டியிடப் போகும் அந்த இறுதி 28 தொகுதிகள் எவை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இருந்து திமுக தனது வேட்பாளர்களை நிறுத்த விரும்பும் தொகுதிகளைத் தவிர்த்து, மீதமுள்ள இடங்கள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேலத்தில் சோகம்!. கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!. 4 பேர் உயிரிழப்பு!.
    Next Article புதுச்சேரியில் தவெக தனித்து போட்டி!. நாளை வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்?
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

    March 21, 2026

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.