Close Menu
    What's Hot

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அண்ணா பல்கலையில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை..! பரபரப்பு புகார் கொடுத்த மாணவி!
    தமிழ்நாடு

    அண்ணா பல்கலையில் 2 ஆண்டாக பாலியல் தொல்லை..! பரபரப்பு புகார் கொடுத்த மாணவி!

    Editor web3By Editor web3March 27, 2026Updated:March 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sexual Harassment Anna University
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் பாலியல் சம்பவம் நடந்துள்ளது பற்றி ஒரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், ‘தனது பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக’ புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 26ஆம் தேதியான நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த புகார் மனுவில், “பேராசிரியர் ஞானவேல் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாகவும்” குறிப்பிட்டுள்ள மாணவி, “இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று அவர் மிரட்டுவதாகவும்” தெரிவித்துள்ளார்.

    மேலும், “தனக்கு மட்டுமின்றி தனது தோழிகளுக்கும் இதேபோன்ற குறுஞ்செய்திகளை அந்த பேராசிரியர் அனுப்பியதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி அழைத்து தொந்தரவு செய்ததாகவும், தான் தனது நண்பர்களுடன் பேசுவதை அவர் தவறாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக POSH கமிட்டியிடமும் தான் புகார் அளித்திருப்பதாகவும், விரைந்து விசாரணை நடத்தி அந்த பேராசிரியர் ஞானவேல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் மாணவி கூறியுள்ளார்.

    மாணவி கொடுத்த புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அபிராமபுரம் மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்டமாக, மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு அப்பேராசிரியர் அனுப்பியதாக கூறப்படும் குறுஞ்செய்திகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பேராசிரியர் ஞானவேலுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து தனது X பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “சுமார் இரண்டு ஆண்டுகளாக, பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது.

    கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போது, உயர்கல்வித்துறை அமைச்சர், அனைத்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினார். ஆனால், அதே காலகட்டத்தில், மேலும் பல மாணவிகள், பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, ‘பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு’ (PoSH) உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியன் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து பேராசிரியர் ஞானவேல் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது பேராசிரியர் ஞானவேல் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி ஞானசேகரன் என்பவனால் பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரமே பெரிய வடுவாக இருக்கும் நிலையில், உள்ளிருக்கும் பேராசிரியராலேயே மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி இருப்பது தமிழ்நாட்டை மீண்டும் ஒருமுறை உலுக்கியிருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓபிஎஸ், செங்கோட்டையனை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?.
    Next Article 16 சிட்டிங் தொகுதிகளிலேயே மீண்டும் களமிறங்கும் காங்கிரஸ்!. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.