Close Menu
    What's Hot

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை

    போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!
    சினிமா

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dhurandhar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ம் தேதி வியாழன் அன்று வெளிவந்த துரந்தர் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வசூல் ரீதியில் துரந்தர் 2 திரைப்படம் புதிய உச்சத்தை தொடுள்ளது.

    அந்தவகையில், இந்தியத் திரைத்துறை வரலாற்றில் இதுவரை காணாத ஒரு பிரம்மாண்ட வெற்றியை ‘துரந்தர்’ திரைப்படம் பதிவு செய்துள்ளது. உலகளவில் ரூ.3000 கோடி வசூலை ஈட்டிய முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. ஒரு திரைப்படம் வசூலில் இமாலய சாதனைகளை எட்ட முடியும் என்பதற்குச் சான்றாக, ‘துரந்தர்’ படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. இதன் மூலம் இந்திய சினிமாவின் வர்த்தக எல்லை சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தச் சாதனையில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களுமே தலா ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன. படத்தின் முதல் பாகம் ரூ.1,307 கோடியையும், அதைத் தொடர்ந்து வெளியான ‘துரந்தர் – 2’ இரண்டாம் பாகம் ரூ.1,712+ கோடியையும் கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இரண்டு பாகங்களுமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, அடுத்தடுத்து பல சாதனைகளைத் தகர்த்து வருவது இந்தியத் திரை உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதற்கு முன்னதாக இந்திய சினிமாவில் வசூல் சாதனையில் முன்னிலையில் இருந்த ‘பாகுபலி’ (பாகம் 1 – ரூ650 கோடி, பாகம் 2 – ரூ.1,788 கோடி) மற்றும் ‘புஷ்பா’ (பாகம் 1 – ரூ.350 கோடி, பாகம் 2 – ரூ.1,871 கோடி) ஆகிய படங்களின் ஒட்டுமொத்த சாதனைகளை ‘துரந்தர்’ தற்போது பின்னுக்குத் தள்ளியுள்ளது. வலுவான கதைக்களம் மற்றும் பிரம்மாண்டமான மேக்கிங் காரணமாக, மொழி எல்லைகளைக் கடந்து இப்படம் வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதால், மற்ற படங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!
    Next Article வெயிலுக்கு இதமான பழைய சாதம்!. வியக்கத்தக்க மருத்துவ பலன்கள்!.
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    June 28, 2026

    தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை

    June 28, 2026

    போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் –  மனம் திறந்த செங்கோட்டையன்

    தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை

    போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.