Close Menu
    What's Hot

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உஷார்!. நாய்க்குட்டியின் நகம் கீறியதால் நேர்ந்த விபரீதம்!. ‘ரேபிஸ்’ பாதிப்பால் பெண் பரிதாப பலி!
    தமிழ்நாடு

    உஷார்!. நாய்க்குட்டியின் நகம் கீறியதால் நேர்ந்த விபரீதம்!. ‘ரேபிஸ்’ பாதிப்பால் பெண் பரிதாப பலி!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    puppy rabies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகனின் மனைவி சுமதி (47), உடல்நலம் குன்றிய தனது வளர்ப்பு நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது, அவரது தோள்பட்டையில் நாய்க்குட்டியின் நகம் பட்டுச் சிறிய கீறல் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய் என்பதால் அலட்சியமாக இருந்த சுமதிக்கு, சில நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ‘ரேபிஸ்’ (Rabies) தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

    தொற்று முற்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமதி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    செல்லப் பிராணிகள் கடித்தால் மட்டுமல்ல, சிறிய கீறல் ஏற்பட்டாலும் கூட அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகித் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும், முறையான விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஒரு சிறு காயம் கூட உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதையும் இச்சம்பவம் வேதனையுடன் உணர்த்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோர் எதிரொலி!. இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்!. ஐநா ரிப்போர்ட்!
    Next Article  கொடூரம்!. ஒரே ஊசியை பயன்படுத்தியதால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று!
    Editor web3
    • Website

    Related Posts

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    June 27, 2026

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    June 27, 2026

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மக்களுக்கான பணி மென்மேலும் சிறக்கட்டும்!- தமிழக காங். தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்..?? ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வைகோ..!!

    தமிழக அரசியலில் தொடர் அதிர்வலைகள்..!! பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வருமா..??

    ஐடி கார்டில் சாதி பெயர் போட மாட்டோம்.. போடவே மாட்டோம்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.