Close Menu
    What's Hot

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»ஈரானிடம் இனி கடற்படையே இல்லை; வெற்றியை நெருங்கிய அமெரிக்கா!. டிரம்ப்!.
    உலகம்

    ஈரானிடம் இனி கடற்படையே இல்லை; வெற்றியை நெருங்கிய அமெரிக்கா!. டிரம்ப்!.

    Editor web3By Editor web3April 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump warning iran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் உடனான ராணுவ மோதலில் அமெரிக்கா மிக விரைவில் முழுமையான வெற்றியை அடையப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்,

    நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த இரண்டு மாதங்களாக வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் தீவிரமாகக் களம் கண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு தற்போது நிலைகுலைந்துள்ளதாகக் கூறினார். ஈரான் மக்கள் திறமையான போராளிகள் என்பதை ஒப்புக்கொண்ட டிரம்ப், அவர்களின் தற்காப்புத் திறன் தற்போது முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

    ஈரானின் கடற்படை பலம் குறித்துப் பேசிய டிரம்ப், அந்நாட்டின் சுமார் 158 போர்க்கப்பல்கள் தற்போது கடலுக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அதிரடி தகவலை வெளியிட்டார். இனி ஈரானிடம் குறிப்பிடும்படியான கடற்படையே இல்லை என்று சாடிய அவர், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட துணிச்சலான ராணுவ நடவடிக்கைகளையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக, உலகின் மிக மோசமான பயங்கரவாதி என்று டிரம்பால் வர்ணிக்கப்பட்ட ஈரான் கமாண்டர் காசிம் சோலைமணி கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மூலமே ஈரான் பலவீனப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

    மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் ஒரு சுமுகமான ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா முன்னுரிமை அளித்து வருவதாக டிரம்ப் கூறினார். இந்த வார இறுதிக்குள் புதிய உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதால், தற்போதைய போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டிக்கத் தேவையில்லை என்று அவர் நம்புகிறார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும், ஒருவேளை ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் மீண்டும் முழுவீச்சில் போர் தொடங்கும் என்றும் டிரம்ப் தனது பேட்டியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொகுதி மறுவரையறை மசோதா!. இரவு 7 மணிக்கு மக்களவையில் வாக்கெடுப்பு!
    Next Article மசோதா தோல்வி! இனிப்பு வழங்கி கொண்டாடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    Editor web3
    • Website

    Related Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    June 23, 2026

    7 ஆண்டுகளில் 6 பிரதமர்!. ஏன் எந்த இங்கிலாந்து பிரதமரும் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதில்லை?

    June 23, 2026

    டென்மார்க் வானில் ஓர் மாயாஜாலம்!. உலகையே வியக்க வைத்த பட்டங்கள்!. வைரல் வீடியோ!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    பிஃபா உலகக்கோப்பையில் மோதும் அர்ஜென்டினா – போர்ச்சுகல்?. ரசிகர்களின் கனவு நனவாகுமா?

    பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.