Close Menu
    What's Hot

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!
    தமிழ்நாடு

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    Editor web3By Editor web3April 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியது உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ் ஜே தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை குறைத்து காட்டியது முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!
    Next Article திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!
    Editor web3
    • Website

    Related Posts

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    April 20, 2026

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    April 20, 2026

    பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. சுனாமி எச்சரிக்கை!

    Trending Posts

    பெற்ற பிள்ளைகள் 7 பேர் உட்பட 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை!. உலகையே உலுக்கிய வெறிச்செயல்!

    April 20, 2026

    பட்டாசு ஆலை விபத்து!. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5.5 லட்சம் இழப்பீடு!.

    April 20, 2026

    திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்!. சாதனை பட்டியல்!

    April 20, 2026

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    April 20, 2026

    பாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.