Close Menu
    What's Hot

    சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    தவெகவில் உட்கட்சி மோதல்: சிவகாசியில் அமைச்சர்கள் இடையே பனிப்போர்..!! நடந்தது என்ன..??

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!
    தமிழ்நாடு

    “பள்ளி குழந்தைகள் போல சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டார் செல்வப்பெருந்தகை”!. அண்ணாமலை!

    Editor web3By Editor web3April 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகமாடினார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்று தான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும். செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

    ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார். இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள் பேசி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் வைக்க, தற்போது, சோதனை நடந்ததாக செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாகக் கூறிய செல்வப்பெருந்தகை, வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது.

    பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை. அவரது நகைச்சுவையை நம்பி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வைத்திருப்பது தான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது. இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவிடம் அதிமுக சரணடைந்துவிட்டது!. ராகுல் காந்தி அட்டாக்!
    Next Article விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு!. உயர் நீதிமன்றம் அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    June 22, 2026

    தவெகவில் உட்கட்சி மோதல்: சிவகாசியில் அமைச்சர்கள் இடையே பனிப்போர்..!! நடந்தது என்ன..??

    June 22, 2026

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டசபையில் எங்களை பேச அனுமதிக்கல..!! வெளிநடப்பு செய்த இபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு..!!

    தவெகவில் உட்கட்சி மோதல்: சிவகாசியில் அமைச்சர்கள் இடையே பனிப்போர்..!! நடந்தது என்ன..??

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    திருவள்ளூர் வாயு கசிவு விவகாரம்..!! சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி..!!

    ரயிலில் ஒன்று… ஆம்புலன்ஸில் ஒன்று!. ஒடிசாவை நெகிழ வைத்த ‘மிராக்கிள்’ பிரசவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.