Close Menu
    What's Hot

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“85% வாக்குப்பதிவு; இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று”!.  விஜய் ட்வீட்!
    தமிழ்நாடு

    “85% வாக்குப்பதிவு; இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று”!.  விஜய் ட்வீட்!

    Editor web3By Editor web3April 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay tweet
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனநாயகத் திருவிழா என்று சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான் என்றும் இது வெறும் தொடக்கம் மட்டுமே என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.

    அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

    அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது இருந்து தொடங்கியதென நடுநிலை மனம்கொண்டோர் அனைவரும் உணர்வர்.

    இதுவரை பெருமளவிலான குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன. ஆனால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.

    85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.

    வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம்போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை. அது மட்டுமா?. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா?

    தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான். இந்த 2026 ஏப்ரல் 23 தான். எனினும் இது ஒரு தொடக்கம் மட்டுமே.

    தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.

    குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய – உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.

    குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி.

    நம்பிக்கையோடு இருப்போம்.
    நல்லதே நடக்கும்.
    வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!. மத்திய அரசு மாஸ் பிளான்!
    Next Article ஆம் ஆத்மிக்கு பெரும் அடி!. ராகவ் சத்தா உட்பட 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர்!
    Editor web3
    • Website

    Related Posts

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    July 31, 2026

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    July 31, 2026

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.