Close Menu
    What's Hot

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சொத்து விவரம்!. உதயநிதிக்கு அதிர்ச்சி!. வருமான வரித்துறை அதிரடி!
    தமிழ்நாடு

    சொத்து விவரம்!. உதயநிதிக்கு அதிர்ச்சி!. வருமான வரித்துறை அதிரடி!

    Editor web3By Editor web3April 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanithi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கும் நடைமுறை தொடங்கும் என வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் குமாரவேல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்குக்கு பதிலளித்து வருமான வரித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்கள் குறித்து சரிபார்க்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நேரடி வரிகள் வாரியம் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களை வருமான வரித்துறை தாமாக முன்வந்து சரிபார்க்கும் நடைமுறையை துவங்க வேண்டும் எனவும், 150 நாட்களுக்குள் சாரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் எனவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்களை பொறுத்தவரை விரிவான ஆய்வு மேற்கொள்ளாமல், 2021 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு தொடர்பான ஒப்பீடை தற்போது மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலினின் நிதி குறித்த ஆவணங்கள் தற்போது வருமான வரித்துறை வசம் இல்லை என்றும், தற்போதைய நிலையில் எந்த இறுதியான முடிவுக்கும் வர முடியாது என்றும்; அதனால் ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக தேர்தல்!. எப்போது வெளியாகும் எக்சிட் போல்?. காத்திருக்கும் மக்கள்!
    Next Article 40% இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற விருப்பம்!. அதிரவைக்கும் ஆய்வறிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    June 11, 2026

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    June 11, 2026

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

    அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் அடக்கம் ; அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு பங்கேற்பு

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.