Close Menu
    What's Hot

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
    Featured

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 CPIM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் நடைபெற்றுள்ள மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் காவிரி மேலாண்மை கூட்டத்தை கூட்டவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

     இதுதொடர்பாக  அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில், இந்த நீர் முறையாக மாதவாரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், காவிரி தொடர்பாக முன்னுக்கு வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் ஐம்பதாவது கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    காவிரி நீர் என்பது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பானவை. தற்பொழுது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை வரும் மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் இல்லாத சூழ்நிலையில், இந்த கூட்டம் நடத்துவது பொருத்தமாக இருக்காது. மேலும், 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தின் பொருள் என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இல்லாத சூழ்நிலையிலும், என்ன பொருள் என்பது முன்கூட்டி அறிவிக்கப்படாத நிலையிலும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகள் என்ன கருத்தை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்க முடியும். கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் அரசின் ஆலோசனையை பெற்று கருத்துக்களை தெரிவிப்பதுதான் வழக்கம்.

    எனவே, ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் பொறுப்பேற்ற பிறகு தேதி நிச்சயித்து காவிரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.
    Next Article வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு
    Editor TN Talks

    Related Posts

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    April 27, 2026

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    April 27, 2026

    அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.