இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
200-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
