Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் வெப்ப எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் வெப்ப எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026Updated:April 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain heat 1920
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மற்றும் நாளை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.

    ஏப்ரல் 30: தமிழகத்தின் ஒருசில இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மே 01 மற்றும் 02: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை தொடரும்.

    மே 03 மற்றும் 04: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வெப்பநிலை மற்றும் அசௌகரியம் குறித்த எச்சரிக்கை:
    மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையாது என எச்சரிக்கப்பட்டுள்ளது:

    வெப்ப உயர்வு: மே 2-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2°C முதல் 3°C வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை நிலவரம்: சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.

    உடல்நல பாதிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புழுக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் 

    வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் போதிய அளவு நீர் அருந்துமாறும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிப்போர் இடி, மின்னலின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் செக் வைத்த திமுகவினர்?. தனி டீம் அமைத்து விசாரிக்கும் செந்தில் பாலாஜி!
    Next Article திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்லும் ஆன்மீக தலம் எது? – வெளியான தகவல்
    Editor TN Talks

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    April 28, 2026

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.