Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தி.மலை சித்ரா பவுர்ணமி கிரிவலம்!. உகந்த நேரம் என்ன?. 30 லட்சம் பக்தர்கள்!. பாதுகாப்பு தீவிரம்!
    தமிழ்நாடு

    தி.மலை சித்ரா பவுர்ணமி கிரிவலம்!. உகந்த நேரம் என்ன?. 30 லட்சம் பக்தர்கள்!. பாதுகாப்பு தீவிரம்!

    Editor web3By Editor web3April 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tiruvannamalai girivalam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கான அதிகாரப்பூர்வ நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9:52 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11:08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த புண்ணிய கால இடைவெளியில் பக்தர்கள் 14 கிலோமீட்டர் நீளம் கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்து ஈசனை தரிசிக்க உகந்த நேரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி வார இறுதி நாட்களை ஒட்டி வருவதால், சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பக்தர்களின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணிக்காக சுமார் 10,000 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிரிவலப் பாதை நெடுகிலும் தடையற்ற குடிநீர் வசதி, தற்காலிகக் கழிப்பறைகள், அவசர கால மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க சிறப்பு தரிசன வரிசைகளும் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்லும் ஆன்மீக தலம் எது? – வெளியான தகவல்
    Next Article தேர்தல் முடிவுகளுக்கு முன் காவிரி ஆணையக் கூட்டமா?. தமிழக உரிமைகளை பறிக்கும் சதி!. சீமான் கடும் கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    April 28, 2026

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.