Close Menu
    What's Hot

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘துருவ நட்சத்திரம்’படத்துக்கு முட்டுக்கட்டை: நீதிமன்றம் எச்சரிக்கை!
    சினிமா

    ‘துருவ நட்சத்திரம்’படத்துக்கு முட்டுக்கட்டை: நீதிமன்றம் எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Duruvanatchathiram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தை வெளியிட தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு வழங்கியுள்ளது.

    கவுதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், டிடி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் துருவ நட்சத்திரம். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மதன், இயக்குனர் கவுதவ் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

    எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் தொடர்பான நிதிப் பிரச்சினை காரணமாக, துருவ நட்சத்திரம் படத்தில் உள்ள தனது 50 சதவீத உரிமையை புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கு மதன் வழங்கினார். இச்சூழலில் கடந்த 2023ல் படத்தை வெளியிட கவுதம் வாசுதேவ் மேனன் முயற்சித்தபோது, தங்களுக்கு சேரவேண்டிய தொகையை தராமல் படத்தை வெளியிட கூடாது என புண்ணியமூர்த்தியும், பிரேம்குமாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து படத்துக்கு தடை உத்தரவு பெற்றனர்.

    அப்போதிலிருந்து பலமுறை முயற்சித்தும் படம் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் இதன் வெளியீட்டிற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் இப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் படத்தின் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க ஒரு வழக்கறிஞர் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார். வருவாய் முறையாகப் பகிரப்படுவதை உறுதி செய்ய ஒரு பிரத்யேக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு எந்தவிதமான முட்டுக்கட்டையும் போடக்கூடாது எனவும் மனுதாரர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், அதற்கான காரணங்களுடன் கால நீட்டிப்பு கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகியூஆர் குறியீடு அடையாளம் – வாக்கு எண்ணும் மையங்களில்  வலுப்படுத்தப்படும் பாதுகாப்பு
    Next Article அடுத்தது வேளாங்கண்ணி, நாகூர் – விஜய் ஆன்மிகப் பயணம் அப்டேட்
    Editor TN Talks

    Related Posts

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    இறுதிவரை மிரட்டிய கேப் வெர்டே அணி!. கூடுதல் நேரத்தில் தப்பித்த அர்ஜென்டினா!. அடுத்த சுற்றுக்கு தகுதி!

    பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.