Close Menu
    What's Hot

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அடுத்தது வேளாங்கண்ணி, நாகூர் – விஜய் ஆன்மிகப் பயணம் அப்டேட்
    Featured

    அடுத்தது வேளாங்கண்ணி, நாகூர் – விஜய் ஆன்மிகப் பயணம் அப்டேட்

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வரும் தவெக தலைவர் நடிகர் விஜய், அடுத்ததாக வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி முடிவுற்ற நிலையில் அதன் முடிவுகள் வருகிற 4-ம் தேதி வெளியாகிறது.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தகிக்கும் அனலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு வேட்டையாடிய அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தேர்தல் முடிவுற்றதும் தங்களை குளுமைப்படுத்திக் கொள்ள மலைவாசஸ்தலங்களுக்கு சென்று வருகிறார்கள்

    ஆனால் தவெக தலைவரும் நடிகருமான விஜயோ தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்னும் வேட்கையில், கடவுளிடம் சரணாகதி அடைந்து ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

     கடந்த 28-ம் தேதி திருச்செந்தூர் சென்ற விஜய், அதிகாலையில் கோவில் நடை திறந்தபிறகு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் ஏப்ரல் 29ஆம்தேதி மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தனி விமானத்தில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடிந்ததும் மாலையே சென்னை திரும்பிய விஜய், இன்று தவெக வேட்பாளர்களை பனையூருக்கு வரவழைத்து பேசினார்.

    இந்த நிலையில் தனது ஆன்மிகப் பயணத்தின் அடுத்தக்கட்டமாக, வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவுக்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன்படி மே 2ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலயத்துக்குச் செல்லும் விஜய்,  அங்கு மாதா சுரூபம் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். தொடர்ந்து, நாகூர் தர்காவுக்கு சென்று வழிபாடு மேற்கொள்கிறார்.

    முருகர், சாய்பாபா, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா என சர்வமத தலங்களுக்கும் விஜய் மேற்கொண்டிருக்கும் இந்த ஆன்மிகப் பயணம் தேர்தல் முடிவுகள் தொடர்பான அவரது கனவை நனவாக்குமா என்பது 4ஆம் தேதி தெரிந்துவிடும்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘துருவ நட்சத்திரம்’படத்துக்கு முட்டுக்கட்டை: நீதிமன்றம் எச்சரிக்கை!
    Next Article நம்பகத்தன்மையை இழக்கும் கருத்துக்கணிப்புகள்… காரணங்கள் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.