Close Menu
    What's Hot

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!
    விளையாட்டு

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    Editor TN TalksBy Editor TN TalksMay 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    T20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

    முதலில் நடந்த ஒருநாள் தொடரில் வங்கதேசம் அணி 2-1 என வென்று தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 14.2 ஓவரில் 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தவ்ஹித் ஹிருடோய் 33 ரன்னும், லிட்டன் தாச் 26 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் ஜோஷ் கிளார்க்சன் 3 விக்கெட்டும், நாத்ன் ஸ்மித், பென் சீர்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூசிலாந்து அணி 11.4 ஓவரில் 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நியூசிலாந்து அணியை பெவன் ஜேக்கப்ஸ் அதிரடியாக ஆடி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”
    Editor TN Talks

    Related Posts

    ஜடேஜா சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்..!

    May 2, 2026

    விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !

    May 2, 2026

    எல் கிளாசிகோ!. வீழ்ந்த பெருமையை மீட்கப்போவது யார்? CSK VS MI இன்று மோதல்!.

    May 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து!

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை நீக்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

    150 ஆண்டுகளுக்கு பின்.. சூரியனின் கோரத்தாண்டவம்!. இந்தியாவுக்கு காத்திருக்கும் கடும் வெப்பமும் வறட்சியும்!

    குப்பைக் கிடங்காகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – சுகாதார சீர்கேட்டால் பயணிகள் அவதி

    Trending Posts

    தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்?

    May 2, 2026

    180-200 இடங்களில் வெற்றி பெறுவோம்!. செங்கோட்டையன் நம்பிக்கை!.

    May 2, 2026

    ”ரஜினிக்கு இருந்த அதே சிக்கல்தான் விஜய்க்கும்!”

    May 2, 2026

    “சாதி பற்றி பேசினால் உதைப்பேன்!” பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் நிதின் கட்கரி ஆவேசம்!.

    May 2, 2026

    விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!. RR கேப்டன் ரியான் பராக் !

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.