தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரம்பூர், திருச்சி கிழக்கி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடுகிறார்.
பெரம்பூரில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாக்கு எண்ணிக்கை மையமான லயோலா கல்லூரிக்கு சென்று அவர் வாங்க உள்ளார்.
இந்த நிலையில் திருச்சி கிழக்கிலும் விஜய் வெற்றி பெறும் நிலையில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து விலகுவார் எனவும், அங்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும்போது தவெக தரப்பில் நடிகை த்ரிஷா களமிறக்கப்படுவார் எனவும் தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நடிகை த்ரிஷாவை, தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் எனவும், அவர் துணை முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தவெகவினர் கூறி வருகின்றனர்.\
