நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளிலேயே சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய் ஜெயித்திருப்பது, 50 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து விஜய் தற்போத் இந்த சாதனையை படைத்து இருக்கிறார். முதல் தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்து களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
மொத்தம் 233 தொகுதிகளையும் சேர்த்து 34.92% வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்துலும், 24.19% வாக்குகளுடன் திமுக 2வது இடத்திலும், 21.21% வாக்குகளுடன் அதிமுக 3-வது இடத்திலும் உள்ளது.
