2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் யாரும் எதிர்பாரா வண்ணம் நடந்து முடிந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி கண்டிருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 என்பது சரிபாதி. சரிபாதிக்கு ஒரு இடம் அதிகம் பெற்றால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்க முடியும். அப்படி பார்த்தால்,
எந்தக் கட்சியுமே பெரும்பான்மை இல்லாததால், இது தொங்கு சட்டசபை என அழைக்கப்படுகிறது. இப்போது என்ன நடக்கும்? கட்சி தாவல் சட்டம் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்..!
யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதை ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் விதி.. தவெக 105 இடங்களை கைப்பற்றி இருப்பதால், தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆகையால், விஜய்யை முதலில் ஆளுநர் அழைத்து ஆட்சி அமைக்க சொல்வதோடு 14 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க கூறுவார்.
ஆனால் விஜய் வெற்றி பெற்றிருப்பது 105 இடங்கள் மட்டுமே. பெரும்பான்மையை நிரூபிக்க தேவையானது 118 இடங்கள். ஆக இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் அவருக்கு தேவை. இந்த 13 எம்.எல்.ஏக்களை எப்படி வாங்கலாம்? அதற்கு 3 வழி உள்ளது..
வழி 1 : கூட்டணி – சட்டப்படி திமுகவில் இருந்தோ, அதிமுகவில் இருந்தோ அல்லது மத்த சிறு சிறு கட்சிகள் சேர்ந்தோ, 13 பேர் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கலாம்.
வழி 2 : கட்சி உடைப்பு – 2/3 விதியின் படி கட்சி தாவல் தடை சட்டம் சம்பந்தப்பட்டது. அதிமுக, அல்லது திமுகவில் இருந்து வெற்றி பெற்றவர்கள் நேரடியாக கட்சி மாறி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டால், விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கும்.
வழி 3 : ராஜினாமா செய்வது. திமுக அல்லது அதிமுகவில் இருந்து 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து, இடைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வந்தால், சட்டப்படி சரியாக இருக்கும். ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க் தான். ஆக விஜய் இதில் எந்த நடவடிக்கையை எடுக்க போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
