Close Menu
    What's Hot

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    ஏமாற்றிய மாவட்ட நிர்வாகம்? மூடப்பட்ட டாஸ்மாக் இடத்தில் புதிய பார்! ஓமலூரில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை – ஜோதிமணி காட்டம்
    அரசியல்

    யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை – ஜோதிமணி காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    johtimani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம் தெரிவித்துள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் ஜோதிமணி பதிவிட்டுள்ளதாவது: –

    நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துப் பயணித்து வருகிறது. ஒரு கூட்டணியில் இருக்கும்போது மேடு பள்ளங்கள் ஏற்படுவது இயல்பு. நானே பலமுறை பகிரங்கமாக மோதியிருக்கிறேன். இப்போது, தமிழகத்தின் நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏகமனதாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி சேர முடிவெடுத்துள்ளது.

    அரசியலில் கூட்டணிகள் உருவாவதும் பிரிவதும் இயல்பானதுதான். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட, நீண்டகால கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை திமுக வெளியேற்றியது. நாங்கள் திடீரென தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காக நாங்கள் திமுகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதை ஒரு அரசியல் நிலைப்பாடாகவே புரிந்துகொண்டோம்.

    தற்போது, காங்கிரஸ் கட்சி ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, பரஸ்பர மரியாதையுடன் கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வதே சிறந்தது. இரு தரப்பிலும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக, தற்போது நடந்து முடிந்த தேர்தலில் திமுக தோல்வியைச் சந்தித்துள்ள சூழலில்—அதுவும் மாண்புமிகு முதலமைச்சர், அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே தோல்வியடைந்திருக்கும் நிலையில்—நேற்று வரை கூட்டணியில் இருந்துவிட்டு இன்று மிகக் காட்டமாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமும் அல்ல, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமும் அல்ல.

    காங்கிரஸ் கட்சியும் கூட கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதற்கு தேசிய அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதன் காரணமாக கூட்டணிகளே அமைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியால் இந்தியா (INDIA) கூட்டணியைத் தலைமை தாங்கி நடத்தியிருக்க முடியாது.

    அதேபோல, எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு யாரிடமிருந்தும் நற்சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டின் பாஜகவின் பாசிச ஆட்சியை சமரசமின்றி எதிர்த்து வீழ்த்தும் வலிமை கொண்ட ஒரே தலைவர் அவர்தான் என்பது தேசத்திற்குத் தெரியும். இதை நினைவில் கொள்ளுங்கள்: அவர் யாரால் சிறுமைப்படுத்தப்பட்டாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், மௌனமாக வேடிக்கை பார்க்கவும் மாட்டோம்.

    அரசியலில் பழைய கூட்டணிகள் பிரிவதும், புதிய கூட்டணிகள் அமைவதும் இயற்கையானது என்ற அரசியல் புரிதலோடு, தமிழகத்தின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பாதையில் நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்.

    இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| விஜய்யுடன் காங்., எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!. சால்வை அணிவித்து வரவேற்பு!
    Next Article சென்னை வந்தார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
    Editor TN Talks

    Related Posts

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    May 17, 2026

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    May 17, 2026

    ஏமாற்றிய மாவட்ட நிர்வாகம்? மூடப்பட்ட டாஸ்மாக் இடத்தில் புதிய பார்! ஓமலூரில் பரபரப்பு!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    ஏமாற்றிய மாவட்ட நிர்வாகம்? மூடப்பட்ட டாஸ்மாக் இடத்தில் புதிய பார்! ஓமலூரில் பரபரப்பு!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    May 17, 2026

    ஏமாற்றிய மாவட்ட நிர்வாகம்? மூடப்பட்ட டாஸ்மாக் இடத்தில் புதிய பார்! ஓமலூரில் பரபரப்பு!

    May 17, 2026

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.