Close Menu
    What's Hot

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் மே 13 வரை கனமழை… எந்தெந்த மாவட்டங்கள்?
    தமிழ்நாடு

    தமிழகத்தில் மே 13 வரை கனமழை… எந்தெந்த மாவட்டங்கள்?

    Editor web1By Editor web1May 7, 2026Updated:May 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையன்று கனமழைக்கு பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 1.5 கிமீ உயரத்தில் நிலவுகிறது.

    தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை, உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

    இதன் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (மே 8) முதல் மே 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    9, 10 தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    11-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 12, 13 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் 2026!. 1.04 பில்லியன் தாண்டிய பார்வையாளர்கள்!. புதிய உலக சாதனை!
    Next Article அதிமுக – திமுக கூட்டணி ஆட்சியா? ஸ்டாலின் உத்தரவால் சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!
    Editor web1
    • Website

    Related Posts

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    May 16, 2026

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    May 16, 2026

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.