Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழக முதலமைச்சர் ஆகிறார் விஜய்.. பெரும்பான்மை பலம் 120 ஆனது!
    Featured

    தமிழக முதலமைச்சர் ஆகிறார் விஜய்.. பெரும்பான்மை பலம் 120 ஆனது!

    Editor web1By Editor web1May 9, 2026Updated:May 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

    தவெகவுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து,  120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைக்கும் உரிமையை விஜய் ஆளுநரிடம் கோர உள்ளார். தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) விசிக (2) மற்றும் ஐயூஎம் எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை தவெக பெற்றுள்ளது.

    இன்று விசிக தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். ஆதரவு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் நேரில் வழங்கினார். இந்த முக்கிய நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா “வெற்றி… வெற்றி…” என மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ ஜனநாயகத்தை வலுப்படுத்தவும்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதை உறுதி செய்யும் வகையிலும் – என்னுடைய அரசியல் ஆசான், வழிகாட்டி அண்ணன் திருமாவளவன்  தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து, விசிக-வின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    முன்னதாக விசிக எம்.பி. ரவிக்குமார் , “தவெக ஆட்சியமைக்க அமைச்சர் பதவி  கோருவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்” என தெளிவுபடுத்தியிருந்தார். துணை முதலமைச்சர் உள்ளிட்ட எந்தப் பதவியையும் விசிக கோரவில்லை என்பதை உறுதிப்படுத்திய வகையில், நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    விசிக உள்ளிட்ட இடதுசாரி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுதியான ஆதரவு விஜய்க்கு பெரும்பான்மை பலத்தை அளித்துள்ளது. விரைவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர உள்ள நிலையில், பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவை ஆதரிக்க பதவியா..? மறுக்கும் விசிக!
    Next Article ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!
    Editor web1
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.