Close Menu
    What's Hot

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கடனில் தத்தளிக்கிறதா தமிழ்நாடு? –  மக்களைத் திசை திருப்பாதீங்க விஜய் – மு.க.ஸ்டாலின் பதிலடி
    Featured

    கடனில் தத்தளிக்கிறதா தமிழ்நாடு? –  மக்களைத் திசை திருப்பாதீங்க விஜய் – மு.க.ஸ்டாலின் பதிலடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 mks vs vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு 10 இலட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாக  முதலமைச்சர் விஜய் கூறியதற்கு மக்களை திசை திருப்பாதீர்கள் என முன்னாள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  நடிகர் விஜய்க்கு  தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்பதாக  தெரிவித்துள்ளார்.

    அதே நேரம், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம் எனக் கூறியுள்ளார்.

    ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு என விஜய் குற்றம்சாட்டியதைக் குறிப்பிட்டு, அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருப்பதாகவும்,  தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவாக சொல்லிவிட்டதாகவும், அது உங்களுக்குத் தெரியாதா? எனவும் வினா எழுப்பியுள்ளார்.

    இதற்குப் பின்னரும் பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்துவிட்டு,  உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க எனக் கூறியுள்ளார்.

    நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,  வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள் என  தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராகுல்காந்தியை கண்டுகொள்ளாத தவெக அமைச்சர்கள்
    Next Article முதலமைச்சரின் தனிச்செயலாளர்கள் நியமனம்!. தமிழக அரசு அதிரடி!.
    Editor TN Talks

    Related Posts

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.