Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக ஆலோசனை – அடுத்தக் கட்ட பரபரப்பு
    Featured

    அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக ஆலோசனை – அடுத்தக் கட்ட பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 cvs eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு, முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னரும், அதிமுகவில் நிலவும் சலசலப்பு அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரானதா என்னும் வினாவை எழுப்பியுள்ளது.

    சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கான 108 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற விஜய் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டார்.
    இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விஜய்க்கு ஆதரவளிக்கலாம் எனவும் கூடாது எனவும், முரண்பட்ட வாக்குவாதங்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
    இதனை உறுதிப்படுத்துவது போல் சி.வி.சண்முகம், எஸ்.பிவேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு முரண் நிற்பதாக தகவல்கள் பரவியது. இதனிடையே, அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டு மே 9ஆம் தேதி சென்னைக்கு அழைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதன்பின்னர் சி.வி.சண்முகத்தின் வீட்டிலும் 36 எம்.எல்.ஏக்கள் கூடிப் பேசினர்.
    இதே நாளில்தான், தனக்கு தேவையான 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெறுவதற்காக விசிக தரப்புடன் தவெக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. இதன்பின்னர் விசிக மட்டுமின்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தனது ஆதரவை நல்கிறது.
    இதனால் மே 10 ஆம்தேதி தவெக ஆட்சியமைத்து சி.ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    இதன்பின்னரும் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் அலுவலகத்தில் அத்முக எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    அதிமுக பொதுச்செயலாளரை மாற்றுவது, சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
    இதே நேரம், எடப்பாடி பழனிசாமி தலைமைய்லும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 3 வது நாளாக அதிமுகவில் இந்த குழப்பம் நீடித்து வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகல கொண்டாட்டம்..! சேஷ வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்..!
    Next Article அரசு வலைதள பக்கத்தில் முதல்வர் விஜய் புகைப்படம்!.
    Editor TN Talks

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.