Close Menu
    What's Hot

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”நீட் தேர்வே வேண்டாம்…”- மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
    Featured

    ”நீட் தேர்வே வேண்டாம்…”- மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்!

    Editor web1By Editor web1May 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM VIjay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2026), கடந்த 03.05.2026 அன்று 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 லட்சம் தமிழக விண்ணப்பதாரர்கள் உட்பட, 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

    வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான CBI-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

    நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் FIR-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் CBI-க்கு மாற்றப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு, நீட்தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும், கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.

    NEET symbol

    நீட் (NEET) தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், தமிழ் வழிப் பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், MBBS, BDS மற்றும் ஆயுஷ் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்கவும், ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“புஷ்பா அரசு அல்ல.. இது மக்கள் அரசு!”- திமுகவுக்கு விஜய் ஆவேச பதிலடி!
    Next Article ” எங்கள் பதவியை பறிக்கும் அதிகாரம் இபிஎஸ்-க்கு கிடையாது”!. சி.வி.சண்முகம் அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது – போஸ்டர் வெளியிட்ட சூர்யா

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026

    நீட் மறுதேர்வு – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் முக்கியக் கடிதம்

    May 15, 2026

    முறைகேடாக வாக்களிப்பு – என்.ஆர்.ஐகள் 25 பேர் கைது

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.