Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»போர் நெருக்கடி!. சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை!
    இந்தியா

    போர் நெருக்கடி!. சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அதிரடி தடை!

    Editor web3By Editor web3May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sugar exports ban
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தகப் பொது இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், செப்டம்பர் 30, 2026 வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை (Raw sugar), வெள்ளை சர்க்கரை  மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என மூன்று வகைகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    https://x.com/ANI/status/2054736874582028706?

    உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதைத் தடுக்கவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கான சி.எக்ஸ்.எல் (CXL) மற்றும் டி.ஆர்.க்யூ (TRQ) ஒதுக்கீட்டின் கீழான ஏற்றுமதிக்குத் தடை இல்லை என்றும் மேலும், மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்பைக் கருதி அரசுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலம் நடக்கும் ஏற்றுமதிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளராக உள்ளது. கரும்பு விளைச்சல் அதிகம் இருக்கும் எனக் கணித்து கடந்த காலங்களில் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் வரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், முக்கிய மாநிலங்களில் கரும்பு விளைச்சல் குறைந்ததால், நாட்டின் உற்பத்தி தேவையை விடக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை உயர வாய்ப்புள்ளதாகவும், தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு இது சாதகமாக அமையலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅன்னக்கிளி 50 – இசைஞானி குறித்து ஒரு ரிவைண்ட்!
    Next Article தங்கம் விலை தடாலடி உயர்வு!. இன்றைய ரேட் இதோ!
    Editor web3
    • Website

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.