கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல காரணங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடியும் இதனை சூசகமாக கூறியிருந்தார். வழக்கம் போல 5 மாநிலங்களின் தேர்தல் முடிந்த பிறகு தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது.
அதன்படி, சென்னையில் ரூ.100.84 ஆக விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.3.14 உயர்த்தப்பட்டு, ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப் போல ரூ.92.39க்கு விற்பக்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் ரூ.3.11 அதிகரித்து ரூ.95.50க்கு விற்பனையாகிறது.
வணிக சிலிண்டர் விலையை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதால், மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
