Close Menu
    What's Hot

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!
    Featured

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி ஒருபக்கமும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சிலர் இன்னொரு பக்கமும் பிரிந்து நிற்கின்றனர். இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், எஸ்பி வேலுமணி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    ”கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை.

    ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.

    ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

    இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.

    மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை.

    இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.

    “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்-“போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!!
    எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!
    Next Article திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை
    Editor TN Talks

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 15, 2026

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026

    விடிந்தவுடன் அதிர்ச்சி செய்தியளித்த மத்திய அரசு..! பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.