Close Menu
    What's Hot

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    Editor web1By Editor web1May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Met 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 16) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் தொடர்ந்து நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (மே 16) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
    Next Article பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?
    Editor web1
    • Website

    Related Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    May 16, 2026

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    May 16, 2026

    மனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.