Close Menu
    What's Hot

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?
    விளையாட்டு

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    Editor web3By Editor web3May 16, 2026Updated:May 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IPL playoff race
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கான களம் மளமளவென சூடுபிடித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டன. கொல்கத்தா, டெல்லி அணிகளின் வாய்ப்புகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 4 இடங்களுக்காக 6 அணிகள் தீவிரமாகப் போராடி வருகின்றன. தற்போதைய புள்ளிகள் பட்டியல் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் எந்த 4 அணிகள் தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.

    குஜராத் டைட்டன்ஸ் – வாய்ப்பு: 98%

    டேபிளில் வலுவான நிலையில் இருக்கும் குஜராத் அணிக்கு பிளே ஆஃப் செல்ல 98% வாய்ப்பு உள்ளது. 12 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் இருக்கும் இந்த அணி, தங்களின் அடுத்த 2 போட்டிகளில் (KKR, CSK அணிகளுக்கு எதிராக) இன்னும் ஒரே ஒரு வெற்றியைப் பெற்றால் கூட அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிடும். ரன் ரேட்டும் ப்ளஸாக இருப்பதால் இவர்களின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகும்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – வாய்ப்பு: 96.1%

    நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 96.1% வாய்ப்புகளுடன் மிக கம்பீரமாக பிளே ஆஃப் வாசலில் நிற்கிறது. 12 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி, மிகச்சிறந்த நெட் ரன் ரேட்டை (+1.053) கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள போட்டிகளில் தோற்றால் கூட ரன் ரேட் அடிப்படையில் இவர்கள் டாப் 4 இடத்தைத் தக்கவைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – வாய்ப்பு: 70.3%

    அதிரடி பேட்டிங்கால் மிரட்டி வரும் ஹைதராபாத் அணி 70.3% வாய்ப்புகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. தற்போது 12 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றுள்ள SRH அணி, தங்களின் அடுத்த இரு போட்டிகளில் (CSK, RCB அணிகளுக்கு எதிராக) ஏதேனும் ஒன்றில் வென்றாலே 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடலாம்.

    கடைசி 1 இடத்திற்கான கடுமையான போட்டி: நான்காவது இடத்தைப் பிடிக்கத் தான் தற்போது முக்கோணப் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் ( 51.6% வாய்ப்புகளுடன்) தொடக்கத்தில் சிறப்பாக ஆடிவிட்டு தற்போது தடுமாறி வரும் ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. அவர்கள் 12 புள்ளிகளுடன் உள்ளனர். மீதமுள்ள போட்டிகளில் இரண்டில் வென்றால் இவர்கள் எளிதாகத் தகுதி பெறலாம்.

    பஞ்சாப் கிங்ஸ் ( – 48.8%): 13 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. ஆனால், சமீபத்திய தோல்விகளால் இவர்களின் வாய்ப்பு 48.8% ஆகக் குறைந்துள்ளது. அடுத்த போட்டிகளில் வெல்வதோடு மற்ற அணிகளின் முடிவுகளையும் இவர்கள் நம்பியிருக்க வேண்டும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK – 28.4%): லக்னோவிடம் தோற்றதால் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு 28.4% ஆக சரிந்துள்ளது. தற்போது 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் செல்ல வேண்டுமெனில், தங்களின் அடுத்த இரு போட்டிகளிலும் (SRH மற்றும் GT அணிகளுக்கு எதிராக) கட்டாயம் வென்றே தீர வேண்டும். அத்துடன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களின் அடுத்த போட்டிகளில் தோற்க வேண்டும் என “மிஸாக்கியா” கணக்குகளை நம்பி காத்திருக்கிறது.

    தற்போதைய நிலவரப்படி குஜராத், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது 90% உறுதியாகிவிட்டது. கடைசி ஒரு இடத்திற்கு ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கிடையே தான் மரண மாஸ் போட்டி நடக்கப்போகிறது. ரன் ரேட் மற்றும் மீதமுள்ள போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அல்லது பஞ்சாப் அணிக்கு அந்த 4-வது இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!
    Next Article தங்கம் விலை மேலும் குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!.
    Editor web3
    • Website

    Related Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    May 16, 2026

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    May 16, 2026

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    May 16, 2026

    மனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.