சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 13-ம் தேதி காலை தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200 என்ற உச்சத்தைத் தொட்ட நிலையில், அதன் பிறகு விலை தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ,290-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 என்ற அளவில் அதிரடியாகக் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
