தனது மனைவியின் உயிரை காப்பாற்றி தருமாறு, காமெடி நடிகர் முத்துக்காளை, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், ஸ்டண்ட் கலைஞராகவும் இருந்து வருபவர் முத்துக்காளை. என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில், செத்து செத்து விளையாடுவோமா என இவர் நடிகர் வடிவேலுவுடன் போடும் காமெடி ஆட்டமும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசியில் ஒற்றனாக வந்து இவர் செய்யும் லந்துவும் மறக்கமுடியாத நகைச்சுவை காட்சிகள்.
முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தலையில் அறுவை சிகிச்சை செய்யட்டுள்ளது. ஆயினும், கிருமி தொற்றால், ‘கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு, நினைவின்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது மனைவிக்கு, உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவி வேண்டும்‘ என தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் உதவி கோரி நடிகர் முத்துக்காளை வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் முத்துக்காளை, விஜய்யுடன் மின்சார கண்ணா, தமிழன், யூத், பகவதி, சுறா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்!
