Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மு.க.ஸ்டாலின் வழியில் ச.ஜோசப் விஜய் –  அதே ஈசிஆர் சாலை
    Featured

    மு.க.ஸ்டாலின் வழியில் ச.ஜோசப் விஜய் –  அதே ஈசிஆர் சாலை

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய்யின் வீடு சென்னை கிழக்குகடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை காஸுரினோ டிரைவ் சாலையில் அமைந்துள்ளது. முதலமைச்சரின் பக்கத்து வீடுதான் இயக்குநர் பாரதிராஜாவின் வீடு. இதே சாலையில்தான் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீடு, இந்திய கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட பல விவிஐபிகளின் வீடுகளும் உள்ளன.

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து 17 கிலோமீட்டர் பயணித்து  தலைமை செயலகத்திற்கு வருகிறார். இதனால் வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் செய்திகள் வெளியாகின

    இந்நிலையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி வாகன அணிவகுப்பு செல்வதற்கென தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சீராக போக்குவரத்து நடைபெறவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சிறப்பு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்படி சாலையின் ஒரு பகுதியில் கூம்பு வடிவ பிளாஸ்டிக் தடைகள் வைக்கப்பட்டு போக்குவரத்து பிரித்து விடப்படுகிறது. இதனால் முதலமைச்சரின் கான்வாய் செல்லும்போதே, பொதுமக்களின் வாகனங்களும் சென்றுவர வசதியாக உள்ளது.

    003

    கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சில மாதங்களாக வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்தார்.

    அப்போதும் இதேபோல் சாலையில் கூம்புவடிவ பிளாஸ்டிக் தடைகள் பயன்படுத்தப்பட்டு சாலை பிரிக்கப்பட்டு மற்ற வாகனங்களும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் , மு.க.ஸ்டாலினின் அதே வழியினைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்
    Next Article அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.