Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!
    தமிழ்நாடு

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    Editor web1By Editor web1May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 05 16 at 10.56.25 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க 7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருவாருர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையின் போது உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டம், கீழகாவாதுகுடி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன், தனது வீட்டுமனைக்கு அனுமதி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரிடம்  பாரதிதாசன் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை பாரதிதாசனிடம் வழங்கியதை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம்  கொடுத்துள்ளார். அலுவலகப் பகுதியில் லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவல்துறையினர்  திடீரென உள்ளே நுழைந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது திடீரென வட்டார வளர்ச்சி அலுவலரின் உதவியாளர் சுரேஷ்குமார் அலுவலகத்தின் மூன்றாவது மாடிக்கு அவசர அவசரமாக ஏறிச் சென்று தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த சுரேஷ்குமாரை சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். லஞ்சப் புகார் தொடர்பான விசாரணையின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியாளர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 
    Next Article மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்
    Editor web1
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.