Close Menu
    What's Hot

    இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை;  விஜய்  ஆட்சிக்கே ஆதரவு – வைகோ திட்டவட்டம்

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அடுத்த 3 நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?- ஆதரவு கட்சிகளுக்கு இத்தனை அமைச்சர் பதவிகளா?
    Featured

    அடுத்த 3 நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?- ஆதரவு கட்சிகளுக்கு இத்தனை அமைச்சர் பதவிகளா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தவெக தலைமையிலான அமைந்துள்ள புதிய அரசில்  அடுத்த 3 நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு

    தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு, புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    அப்போது அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர் நிர்மல் குமார்  உள்பட 9 பேர் அமைச்சர்களாக முதற்கட்டமாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இதன்பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த விஜய்க்கு, அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 25 பேரும், அமமுக எதிர்ப்பு எம்.எல்.ஏ காமராஜும் ஆதரவு அளித்தனர்.

    இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

    தவெக ஆரம்பித்து விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டிலேயே, “தன்னுடன் கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும்” என்று ஜோசப் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார். தற்போது தேர்தலுக்கு முன்பாகவும் அதனையே விஜய் பேசியிருந்தார். அதன்படியே தற்போது அமைச்சரவை பங்கீடும் அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?

    இதன்படி, ஆளுங்கட்சியான த.வெ.க.வுக்கு 26 அமைச்சர்களும் 8 அமைச்சர் பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாக தவெக வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சி: தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

    எஸ்.பி.வேலுமணி அணி (அ.தி.மு.க பிரிவு): அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி அணியினருக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக): தி.மு.க கூட்டணியில் வென்று, தற்போது த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ள விசிக தரப்பில் 1 இடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்தும் தற்போது தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    அடுத்த 3 நாட்களில் இந்தப் பணிகளை எல்லாம் முடித்து, புதிய அமைச்சரவை பட்டியலைத் தயாரிக்க முதல்–அமைச்சர் ஜோசப் விஜய் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    தொடர்ந்து அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டு, துறைகள் ஒதுக்கப்பட்ட பின்னர், புதிய அமைச்சர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) ஆளுநர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிகிறது.

    புதிய அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய முதல்–அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யார் அமைச்சர்கள், முதல் சட்டசபை கூட்டத்தொடர் எவ்வாறு நடைபெறும், அதன் முழு ஒளிபரப்பும் நேரலையில் காட்டப்படுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் இப்போதே தவெகவினர் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?
    Next Article எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை;  விஜய்  ஆட்சிக்கே ஆதரவு – வைகோ திட்டவட்டம்

    July 2, 2026

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    July 2, 2026

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை;  விஜய்  ஆட்சிக்கே ஆதரவு – வைகோ திட்டவட்டம்

    ரூ.50 கோடியாம்..!! தவெக MLA-க்களை இழுக்க பேரம்.. ஆதாரம் இருக்கு என நிர்மல் குமார் அதிரடி..!!

    ஸ்டாலின் கூறிய ஆட்சி மாற்றத்தின் பின்னணி இதுதானா? – பெ.சண்முகம் விமர்சனம்

    வடக்கில் யூஸ் பண்ண ‘வாஷிங் மெஷின்’ தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சாமே..!! கலாய்த்த கனிமொழி..!!

    பொன்முடி தொடர்ந்த  வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.