Close Menu
    What's Hot

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 
    தமிழ்நாடு

    சென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 

    Editor web3By Editor web3May 16, 2026Updated:May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Glanders horse
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குதிரை, கழுதை போன்ற விலங்கினங்களைத் தாக்கக்கூடிய, மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஆபத்தான “கிளாண்டர்ஸ்” (Glanders) பாக்டீரியா தொற்று சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த குதிரை ஒன்று தற்போது உயிரிழந்துள்ளது.

    அந்த குதிரையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் உடலில் பல இடங்களில் புண்கள், வீங்கிய கட்டிகள், கடுமையான சதை சுருக்கம் போன்ற அறிகுறிகளை கண்டறிந்தனர். இதையடுத்து கிளாண்டர்ஸ் நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய அரசின் ICAR–National Research Centre on Equines ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த மாதிரிகள் வைத்து பல்வேறு கட்ட பரிசோதனைகளில் கிளாண்டர்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்புத் துறையும் சுகாதாரத்துறையும் இணைந்து அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. உயிரிழந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்றும் அதற்கு அருகில் இருந்த அனைத்து குதிரைகளையும் உடனடியாகத் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த கால்நடை பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை!

    கிளாண்டர்ஸ் என்பது பொதுவாகக் குதிரை, கழுதைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு ஆபத்தான ‘ஜூனோடிக்’ தொற்றாகும்.  பாதிக்கப்பட்ட விலங்குகளின் உடல் திரவங்கள்,  காயங்கள் மூலம் மனிதர்களுக்கு இது பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் குதிரை வளர்ப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    தமிழகத்தில் இந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரி நடத்தும் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளுக்குப் பரிசோதனை செய்வதைக் கட்டாயமாக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“யார் கேட்டாலும் கையெழுத்து போடாதீங்க!”. ஆதரவாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு!
    Next Article ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!
    Editor web3
    • Website

    Related Posts

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?

    May 16, 2026

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!. மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு?

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    சென்னையில் “கிளாண்டர்ஸ்” தொற்றால் குதிரை பலி! மனிதர்களுக்கும் பரவும் அபாயம்!. 

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    முதலமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!. 6 முக்கிய கோரிக்கைகள் ஒப்படைப்பு!

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.